உத்தரபிரதேசம்: லக்னோ தனியார் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து


உத்தரபிரதேசம்: லக்னோ தனியார் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து
x

 Image Courtesy: ANI

தினத்தந்தி 5 Sept 2022 11:19 AM IST (Updated: 5 Sept 2022 4:28 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. ஓட்டலில் பலர் சிக்கி உள்ளதாகவும், புகைமூட்டம் காரணமாக பலர் மயங்கி விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டலின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சிக்கியிருப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மின்கசிவு காரணமாக ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி கூறுகையில், மீட்பு பணியினை எளிதாக்குவதற்காக ஓட்டலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அறைகள் முழுவதும் புகைமூட்டமாக இருப்பதால் உள்ளே செல்வதற்கு சிரமமாக உள்ளது. ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கிரில்களை உடைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story