சந்தை பகுதியில் பயங்கர தீ விபத்து - 130 கடைகள் எரிந்து நாசம்
சந்தை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 130 கடைகள் எரிந்து நாசமாகின.
சண்டிகர்,
அரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டம் ரிஹ்ரி சந்தை பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. துணிக்கடை, வாகன டயர் கடை, பொம்மைக்கடை, பிளாஸ்டிக் விற்பனை கடை என பல கடைகள் உள்ளன.
இந்நிலையில், இந்த சந்தை பகுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ அடுத்தடுத்து கடைகளில் மளமளவென பரவியது.
சந்தை பகுதியில் இருந்த 130 கடைகள் தீக்கிரையாகியது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் 15 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று பற்றி எரிந்த தீயை வெகுநேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story