நாடு முழுவதும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் : டெல்லியில் ஜனாதிபதி பங்கேற்பு


நாடு முழுவதும் பிரம்மாண்ட  யோகா நிகழ்ச்சிகள் : டெல்லியில் ஜனாதிபதி பங்கேற்பு
x

சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது

புதுடெல்லி,

சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது .கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யோகா தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடத்த முடியாததால், இந்த ஆண்டு பிரமாண்டமாக அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை ராஷ்டிரபதி பவன்-ல் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார்..

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் ;

யோகா நமது இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். , இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும், இது நமது மனம், உடல் ஆகியவற்றை சமநிலைப்படுத்துகிறது" என்று அவர் கூறினார் .

1 More update

Next Story