மணமகன் தேவை 'சாப்ட்வேர் இன்ஜினியர்கள்' போன் செய்யவேண்டாம் - வைரலான மேட்ரிமொனி விளம்பரம்


மணமகன் தேவை சாப்ட்வேர் இன்ஜினியர்கள் போன் செய்யவேண்டாம் - வைரலான மேட்ரிமொனி விளம்பரம்
x

மணமகன் தேவை என செய்தித்தாளில் வெளியான விளம்பரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவு செய்து போன் செய்யவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மணமகன்/ மணமகள் தேடுதல் படலம் தற்போது பல்வேறு தளங்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இடைத்தரகர்கள், செய்தித்தாள் மூலம் விளம்பரம், மேட்ரிமோனி இணைதளம் என பல்வேறு வழிமுறைகளில் மணமகன்/ மணமகனை தேடும் படலம் விரிவடைந்து வருகிறது.

குறிப்பாக, இந்த தேடலின் போது வித்தியாசமான வகையில் தங்கள் விளம்பரங்களை மணமகன்/ மணமகள் தரப்பினர் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மணமகன் தேவை என பெண் வீட்டார் தரப்பில் செய்தித்தாளில் வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் பெண் வீட்டார் தரப்பில் மணப்பெண்ணுக்கு யார் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்பதை தெரிவித்த விதம் ஆகும்.

செய்தித்தாளில் வெளியான அந்த விளம்பரத்தில், சாட்வேர் இன்ஜினியர்கள் தயவு செய்து போன் செய்யவேண்டாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மணமகன் தேவை என்ற தலைப்பில் செய்தித்தாளில் வெளியான அந்த விளம்பரத்தில், 24 வயதான எம்.பி.ஏ. படித்துள்ள அழகான பணக்காரக தொழில் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ், டாக்டர், தொழிலதிபர் மணமகன் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவு செய்து போன் செய்ய வேண்டாம் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பெண் வீட்டாரை தொடர்பு கொள்ள இ-மெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மணமகன் தேவை என செய்தித்தாளில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் 'சாப்ட்வேர் இன்ஜினியர்கள்' தயவு செய்து போன் செய்ய வேண்டாம்' என குறிப்பிட்டுள்ளது மற்றும் அந்த செய்தித்தாள் விளம்பரம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.




Next Story