தேர்தல் கமிஷனுக்கும் நடத்தை விதி வேண்டும் - கபில் சிபல்


தேர்தல் கமிஷனுக்கும் நடத்தை விதி வேண்டும் - கபில் சிபல்
x

அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

புதுடெல்லி

நமது நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல்களின்போது இலவசங்களை வழங்குவதும், அது தொடர்பான வாக்குறுதிகளை அளிப்பதும் நடைமுறையில் உள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில், தேர்தல் அறிக்கையில் இடம் பெறச்செய்கிற வாக்குறுதிகள், அவற்றால் ஏற்படும் பணச்செலவு, அதற்கு நிதி அளிப்பதற்கான வழிமுறைகள் பற்றி 19-ந் தேதிக்குள் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

இதை முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் சாடி உள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

இலவசங்கள் தொடர்பான விவாதத்தில் இருந்து விலகி இருக்கப்போவதாக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் பிரமாண பத்திரம் அளித்தது. இப்போது அளவு கடந்து சென்றுள்ளது. ஆனால் இலவசங்கள் பற்றி நடத்தை விதிமுறைகளில் இடம்பெறச்செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. தேர்தல் கமிஷனுக்கே நடத்தை விதிகள் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story