வீட்டில் பதுக்கி விற்ற 10 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்


வீட்டில் பதுக்கி விற்ற 10 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:47 PM GMT)

வீட்டில் பதுக்கி விற்கப்பட்ட பத்து கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

சிக்கமகளூரு:


சிக்கமகளூரு டவுன் திப்புநகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாட்டிறைச்சி விற்பனை ெசய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்ட 10 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் ெசய்யப்பட்டது. மேலும் அங்கிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story