நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்பு


நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Dec 2022 6:22 AM GMT (Updated: 22 Dec 2022 6:31 AM GMT)

நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர்.

புதுடெல்லி,

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான்.இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.

இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர். கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், அவையில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவை உறுப்பினர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்து மக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும் என மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story