கர்நாடகா-மராட்டிய எல்லை அருகே ஏகிகிரன் சமிதி அமைப்பு ஆர்ப்பாட்டம்
மராட்டிய ஏகிகிரன் சமிதி மற்றும் என்சிபி உறுப்பினர்கள் கர்நாடகா-மராட்டிய எல்லைக்கு அருகில் உள்ள கோக்னோலி டோல் பிளாசா அருகே எல்லைப் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெங்களூரு,
சமீபத்தில் கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை எழுந்தது. இரு மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து கூட்டம் நடத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மோதல் போக்கை தவிா்க்க மந்திரிகள் மட்டத்தில் இருதரப்பிலும் 6 பேர் கொண்ட குழுவை அமைக்கும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவை இரு மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.
மராட்டியத்திற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பெலகாவியில் சுவர்ண விதான சவுதாவை கட்டியுள்ள கர்நாடகம் அங்கு ஆண்டுதோறும் குளிர்கால கூட்டத்தொடரை நடத்தி வருகிறது. இதற்கு அங்குள்ள மராட்டிய ஏகிகிரன் சமிதி (எம்.இ.எஸ்.) அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது வாடிக்கை. அதேபோல் இந்த முறையும் அந்த அமைப்பு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு கூட்டத்திற்கும் அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளநிலையில்
மராட்டிய ஏகிகிரன் சமிதி மற்றும் என்சிபி உறுப்பினர்கள் கர்நாடகா-மராட்டிய எல்லைக்கு அருகில் உள்ள கோக்னோலி டோல் பிளாசா அருகே எல்லைப் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கருத்தில் கொண்டு அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.