பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்-வருகிற 25-ந் தேதி நடக்கிறது


பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்-வருகிற 25-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 14 Oct 2022 6:45 PM GMT (Updated: 14 Oct 2022 6:46 PM GMT)

பெங்களூரு பையப்பனஹள்ளியில் இருந்து ஒயிட்பீல்டு இடையே புதிய மெட்ரோ ரெயில் பாதைக்கான சோதனை ஓட்டம் வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது.

பெங்களூரு: பெங்களூரு பையப்பனஹள்ளியில் இருந்து ஒயிட்பீல்டு இடையே புதிய மெட்ரோ ரெயில் பாதைக்கான சோதனை ஓட்டம் வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது.

லாரிகள் மூலம்...

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பையப்பனஹள்ளியில் இருந்து ஒயிட்பீல்டு வரையிலான புதிய மெட்ரோ ரெயில்பாதை திட்டத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் வருகிற 25-ந் தேதி பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மெட்ரோ ரெயில் பெட்டிகள் பையப்பனஹள்ளியில் ஒழுங்குப்படுத்தப்பட்டு ராட்சத லாரிகள் மூலம் ஒயிட்பீல்டு ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

சோதனை ஓட்டம்

இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ நிர்வாக மேலாளர் அன்சும் பர்வேஷ் கூறுகையில், மெட்ரோ ரெயில் பெட்டிகள் ஒயிட்பீல்டுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. வருகிற 25-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. ஒயிட்பீல்டு-கருடாச்சார்பாளையா இடையே டிரோலி மூலம் நாங்கள் சோதனை மேற்கொண்டாம். ரெயில் நிலைய பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. வருகிற ஜனவரிக்குள் இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்படும். அதன் பின்னர் பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு மார்ச் இறுதியில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்க முடிவு செய்துள்ளோம். மெட்ரோ பணியில் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவியுடன் தண்டவாளங்கள் சோதனை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story