கர்நாடகாவில் விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகாய்த் மீது மை வீச்சு


கர்நாடகாவில் விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகாய்த் மீது மை வீச்சு
x

பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கும் போது, திடீரென வந்த சிலர், ராகேஷ் திகாய்த் மீது மை வீசினர்.

பெங்களூரு,

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் விவசாயிகளின் முகமாக இருந்தவர் ராகேஷ் திகாய்த். கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்துள்ள ராகேஷ் திகாய்த் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். கர்நாடக விவசாய சங்க தலைவர் ஒருவர் பணம் கோரியதாக வெளியான ரகசிய வீடியோ குறித்து பேசுவதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை ராகேஷ் திகாய்த் ஏற்பாடு செய்து இருந்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கும் போது, திடீரென வந்த சிலர், ராகேஷ் திகாய்த் மீது மைக் கொண்டு தாக்கினார். தொடர்ந்து மை வீசியும் ராகேஷ் திகாய்த் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, ராகேஷ் திகாய்த் ஆதரவாளர்கள் திரண்டதால், அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. இரு தரப்பினர் இடையே அங்கிருந்த நாற்காலிகளை கொண்டு தாக்கிக் கொண்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இது குறித்துப் பேசிய ராகேஷ் திகாய்த், கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. இது கர்நாடக காவல்துறையின் தோல்வி. இது மிகப்பெரிய சதித்திட்டம் ஆகும். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.


Next Story