மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் உடன் அமைச்சர் துரைமுருகன் இன்று சந்திப்பு
மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத் உடன் அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசுகிறார்.
புதுடெல்லி,
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லிச் சென்றார்.
இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என வலியுறுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதிக்கப்பட்டால் தமிழக அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்வார்கள் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையை பொறுத்து அடுத்த கட்ட நகர்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story