சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - டெல்லியில் எதிர்ப்பு


சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - டெல்லியில் எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 Sept 2023 10:59 AM IST (Updated: 4 Sept 2023 12:19 PM IST)
t-max-icont-min-icon

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு டெல்லியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு டெல்லியில் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா தலைமையில் மூத்த தலைவர்கள் குழு எதிர்ப்பு கடிதம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக கடிதம் அளித்துள்ளது.

அந்த கடிதத்தில், சனாதானம் தொடர்பான தன் கருத்துக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story