டெல்லியில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் உடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு


டெல்லியில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் உடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
x

டெல்லி, க்ரிஷி பவனில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து இன்று மதியம் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக விவரித்து பேசினார்.


Next Story