ஆம்புலன்ஸ் மீது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து - மூன்று பேர் காயம்


ஆம்புலன்ஸ் மீது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து - மூன்று பேர் காயம்
x

ஆம்புலன்ஸ் மீது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

கேரளா,

கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்ட நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கொட்டாரக்கரை புலமண் சந்திப்பில் சிக்னல் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தனர். சிக்னலில் இருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வேனை கடந்து செல்லுமாறு சைகை செய்தனர்.

இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அந்த சமயத்தில் கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டியின் கான்வாய் வாகனம் சாலையை கடந்த போது ஆம்புலன்ஸ் வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் உருண்டது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதியினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை கொட்டாரக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story