காஷ்மீரில் புதிதாக 25 லட்சம் வெளிமாநில வாக்காளர்கள் சேர்ப்பா? அரசு விளக்கம்


காஷ்மீரில் புதிதாக 25 லட்சம் வெளிமாநில வாக்காளர்கள் சேர்ப்பா? அரசு விளக்கம்
x

‘காஷ்மீர் வாக்காளர் பட்டியலில் கடந்த 2011-ம் ஆண்டு 66 லட்சமாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 76 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் வாக்காளர் பட்டியலில் புதிதாக 25 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள். அவர்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது காஷ்மீர் மக்களின் வாக்கு வலிமையை பாதிக்கும் முயற்சி என அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை கடுமையான விமர்சித்தன.

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளித்து, உள்ளூர் நாளிதழ்களில் நேற்று காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை விளம்பரம் வெளியிட்டது.

அதில், 'காஷ்மீர் வாக்காளர் பட்டியலில் கடந்த 2011-ம் ஆண்டு 66 லட்சமாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 76 லட்சமாக அதிகரித்துள்ளது.

18 வயதை எட்டிய புதிய வாக்காளர்களால்தான் இந்த எண்ணிக்கை அதிகரிப்பு. மாறாக, சிலர் சுயநல அடிப்படையில் வெளியிடும் தகவல்களைப் போல, வெளிமாநில வாக்காளர்களை சேர்த்ததால் அல்ல.

இடம்பெயர்ந்து வாழும் காஷ்மீர் மக்கள் வாக்களிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் எப்போதும் போல் செய்யப்படும்.

அதேபோல, காஷ்மீரில் சொத்து வாங்குவது, வேலை பெறுவது தொடர்பான விதிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story