சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு


சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 1 Dec 2023 3:19 PM GMT (Updated: 1 Dec 2023 3:19 PM GMT)

டிசம்பர் 3 ஆம் தேதி மிசோரம் மாநில மக்களுக்கு விசேஷ தினம் என்பதால் வாக்கு எண்ணிக்கை ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐஸ்வால்,

மிசோரம் மாநிலத்தில் கடந்த 7 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 3 ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story