மிசோரம் ரெயில்வே பாலம் விபத்து: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு


மிசோரம் ரெயில்வே பாலம் விபத்து: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு
x

மிசோரம் ரெயில்வே பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அய்ஸ்வால்,

மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள சாய்ராங் பகுதியில் கட்டப்பட்டு வந்த ரெயில்வே பாலம் நேற்று முன்தினம் காலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதை தொடர்ந்து, அங்கு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் 18 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் மிசோரம் ரெயில்வே பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விபத்து நடந்தபோது அங்கு 26 தொழிலாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 3 பேர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 23 பேர் பலியான நிலையில் இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 5 பேரின் உடல்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.


Next Story