இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா- பிரதமர் மோடி டுவீட்
வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றது.
புதுடெல்லி,
40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. இதைப்போல சத்தீஷ்காரின் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரு மாநிலங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில்,
மிசோரம், சத்தீஸ்காரில் இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா. முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து இவ்விழாவில் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதல்முறையாக வாக்களித்த அனைத்து மாநில இளம் நண்பர்களுக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள். இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story