குருகிராமில் மசூதிக்குள் புகுந்து அட்டூழியம்! தொழுகை நடத்தியவர்கள் மீது 200 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்!


குருகிராமில் மசூதிக்குள் புகுந்து அட்டூழியம்! தொழுகை நடத்தியவர்கள் மீது 200 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்!
x

குருகிராமில் உள்ள ஒரு மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை ஒரு கும்பல் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

குருகிராமில் உள்ள ஒரு மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை ஒரு கும்பல் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் குருகிராமில், மீண்டும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போடகலா கிராமத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களை நாசக்கார கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மசூதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பெண்களைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுபேதார் நாசர் முகமது என்பவர் அளித்த புகாரின்படி, போரா கலன் கிராமத்தில் முஸ்லிம் குடும்பங்களுக்கு நான்கு வீடுகள் மட்டுமே உள்ளன. கடந்த புதன்கிழமை காலை சுமார் 200 பேர் கொண்ட கும்பல் மசூதியைச் சுற்றி வளைத்து தொழுகைக் கூடத்திற்குள் நுழைந்து அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திது.

மீண்டும் அன்றிரவு, மசூதியில் உள்ள தொழுகை கூடத்தில் தொழுது கொண்டிருந்த போது, கும்பல் வந்து தாக்கியது. நாங்கள்(முஸ்லிம்கள்) இந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டுமென்று அவர்கள் மிரட்டினர். கொலை செய்வதாகவும் மிரட்டல் விடுத்தனர். தொழுகைக் கூடத்திற்கு பூட்டு போட்டுவிட்டு சென்றனர். இவ்வாறு அவர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், மக்கள் கூட்டம் கூடியதும், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story