பிரித்வி, பிரமோஸ் மாதிரிகளுடன் கொல்கத்தாவில் ஏவுகணை பூங்கா திறப்பு


பிரித்வி, பிரமோஸ் மாதிரிகளுடன் கொல்கத்தாவில் ஏவுகணை பூங்கா திறப்பு
x
தினத்தந்தி 13 May 2023 4:15 AM IST (Updated: 13 May 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் ஏவுகணை பூங்கா திறக்கப்பட்டு உள்ளது.

கொல்கத்தா,

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் ஏவுகணை பூங்கா திறக்கப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவின் படை பலத்தை பறைசாற்றும் நவீன ஏவுகணைகளின் மாதிரிகள் வைக்கப்பட்டு உள்ளன.

இதில் முக்கியமாக பிரமோஸ், பிரித்வி மற்றும் 4 ஏவுகணைகளின் பிரமாண்ட மாதிரிகள் அங்கு நிறுவப்பட்டு உள்ளன. அத்துடன் இந்தியாவின் ஏவுகணை மனிதன் என வர்ணிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முழு உருவச்சிலையும் நிறுவப்பட்டு உள்ளது.

இந்த பூங்கா குறித்து கொல்கத்தா அறிவியல் நகர இயக்குனர் அனுராக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மக்கள் வழக்கமாக தொலைக்காட்சியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பார்க்கும் ஏவுகணைகளை இங்கு நேரில் பார்க்கலாம். ஏவுகணை தொழில்நுட்பத்துறையில் இந்தியா அடைந்துள்ள பெரும் முன்னேற்றங்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள நவீன மாதிரிகள் கொண்ட ஏவுகணைப் பூங்காவை நாங்கள் அமைத்துள்ளோம். இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தங்கள் தொழிலாக எடுத்துக்கொள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என தெரிவித்தார்.


Next Story