"மோடியால் பிரதமராக முடிந்த‌து... நிதீஷ்குமாரால் முடியாதா?" - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு பேச்சு


மோடியால் பிரதமராக முடிந்த‌து... நிதீஷ்குமாரால் முடியாதா? - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு பேச்சு
x

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

பாட்னா,

பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் முதல்-மந்திரியான நிதீஷ் குமார், பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்று கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், பிரதமர் நரேந்திர மோடியால் முடிந்த‌து, ஏன் நிதீஷ் குமாரால் முடியாது என்றார். நிதீஷ் குமார் நிர்வாக அனுபவமிக்கவர். பீகாரில் அவர் செய்தது போன்று, அச்சமில்லாமல் எதிர்த்து போராட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு நபர் வேண்டும் என்ற தேஜஸ்வி, இந்தியாவை சிறந்த முறையில் வழிநடத்த தேவையான ஒரு நபரை, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அரசு தொடர்ந்து சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளின் மூலம் சோதனையிட்டபோதிலும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறிய அவர், தனது வீட்டிலேயே சிபிஐக்கு அலுவலகம் அமைத்து தர தயாராக இருக்கிறேன் என்று நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்தது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல. தன்னிச்சையாக நடந்தது என கூறினார்.


Next Story