தரைக்கு அடியில் இருந்து அள்ள அள்ள வந்த பணம்....ஷாக்கான அதிகாரிகள்


தரைக்கு அடியில் இருந்து அள்ள அள்ள வந்த பணம்....ஷாக்கான அதிகாரிகள்
x

பீகாரில் போதைப் பொருள் பிரிவு காவல் ஆய்வாளர் ஜித்தேந்திர குமார் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

பாட்னா,

பீகாரில் லஞ்ச ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் படுக்கை முழுதும் பதுக்கி வைக்கப்பட்ட கத்தை கத்தையான ரொக்கப்பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

போதைப் பொருள் பிரிவு காவல் ஆய்வாளர் ஜித்தேந்திர குமார் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நூறு ரூபாய் நோட்டுகள் முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரை கத்தை கத்தையாகப் பணம் படுக்கை முழுதும் நிரப்பி பதுக்கப்பட்டிருந்ததை சோதனையில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த நோட்டுகளை எண்ணி முடிக்க பல மணி நேரமானது. இத்துடன் குவியலாக தங்கம் மற்றும் நான்கு சொகுசு கார்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.


Next Story