குரங்கு அம்மை பாதிப்பு: டெல்லியில் 6 மருத்துவமனைகளில் 70 தனிமைப்படுத்தும் அறைகள் அமைப்பு


குரங்கு அம்மை பாதிப்பு: டெல்லியில் 6 மருத்துவமனைகளில் 70 தனிமைப்படுத்தும் அறைகள் அமைப்பு
x

குரங்கு அம்மை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக டெல்லியில் 6 மருத்துவமனைகளில் 70 தனிமைப்படுத்தும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 14 ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதேபோல் தலைநகர் டெல்லியில் மூன்று பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குரங்கு அம்மை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக டெல்லியில் 6 மருத்துவமனைகளில் 70 தனிமைப்படுத்தும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (எல்.என்.ஜே.பி) மருத்துவமனையில் 20 தனிமைப்படுத்தும் அறைகளை அமைக்கப்பட்டுள்ளன. குரு டெக் பகதூர் மருத்துவமனையில் (ஜிடிபி) மருத்துவமனையில் 10 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் பாபா சஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் 10 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 3 தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது பத்து தனிமைப்படுத்தும் அறைகள் அமைக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story