மழைக்கால கூட்டத்தொடர் : மக்களவை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
ஜனாதிபதி தேர்தல் காரணமாக பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத் தொடர் தொடங்கியதும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்கிடையே டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்வதற்காக நண்பகல் 2 மணி வரை மக்களவையை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.