19 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதிப்பு..!!
விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் இந்தியா முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோ போன்ற எண்ணற்ற தகவல்களை பகிர்வதற்கு இந்த செயலி அதிகளவில் பயன்படுத்தபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் மட்டும் 19 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது.
கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல் விதிகளை மீறியதாக கூறி ஏப்ரல் மாதத்தில் இந்திய பயனர்களின் 16 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளையும், மார்ச் மாதத்தில் 18.05 லட்சம் கணக்குகளையும் அந்த நிறுவனம் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story