புல்லட் ரெயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி 98 சதவீதம் நிறைவு: அதிகாரி தகவல்


புல்லட் ரெயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி 98 சதவீதம் நிறைவு: அதிகாரி தகவல்
x

புல்லட் ரெயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி 98 சதவீதம் நிறைவு பெற்றதாக அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

நாட்டிலேயே அதிவிரைவு ரெயிலான புல்லட் ரெயில் அமைக்கும் திட்டம் மும்பை முதல் ஆமதாபாத் வரையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணி ஒரிரு இடங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் புல்லட் ரெயில் திட்டத்திற்கான தேவையான 188 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தேசிய அதிவேக ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் புல்லட் ரெயில் திட்டத்திற்கு 191.54 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. தற்போது 188 ஹெக்டேர் நிலம் அதாவது 98 சதவீதம் கைப்பற்றி உள்ளோம்.

இன்னும் 3.54 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையக்கப்படுத்த படாமல் உள்ளது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு 70 சதவீதம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. மீதி 54 ஹெக்டேர் நிலத்திற்கான இழப்பீடு விரைவில் வழங்கப்படும். பால்கர் மாவட்டத்தை பொறுத்தவரையில் புல்லட் ரெயில் திட்டத்திற்கு பால்கர் தாலுகாவில் அதிகபட்சமாக 70.34 ஹெக்டேர் நிலம், தகானுவில் 50.85, வசாய் தாலுகாவில் 37.03, தலசேரி தாலுகாவில் 33.31 ஹெக்டேர் நிலமும் தேவைப்படுவதாக அவர்தெரிவித்தார்.


Next Story