மின்னல் தாக்கி தாய், 2 குழந்தைகள் சாவு


மின்னல் தாக்கி தாய், 2 குழந்தைகள் சாவு
x

மின்னல் தாக்கி தாய், 2 குழந்தைகள் பலியானார்கள்.

பெங்களூரு: யாதகிரி தாலுகா காஜரகோட் கிராமத்தை சேர்ந்தவர் மோனம்மா (வயது 25). இவருக்கு 4 வயதில் பானு என்ற மகனும், 2 வயதில் சீனிவாஸ் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. நேற்று காலையில் குழந்தை சீனிவாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தனது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல மோனம்மா முடிவு செய்தார். பின்னர் நேற்று மதியம் தனது மைத்துனர் பீமாசங்கர் (32) என்பவருடன், மோனம்மா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். எம்.ஒசஹள்ளி பகுதியில் 4 பேரும் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மோனம்மா தனது குழந்தையுடன் அங்குள்ள மரத்திற்கு அடியில் நின்றார். அந்த சந்தர்ப்பத்தில் அவர்களை மின்னல் தாக்கியது. இதில் மோனம்மாவும், 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிர் இழந்தனர். பீமாசங்கர் பலத்தகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து யாதகிரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.


Next Story