டீன்-ஏஜ் மகளை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய தாய், கள்ளக்காதலனுடன் கைது


டீன்-ஏஜ் மகளை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய தாய், கள்ளக்காதலனுடன் கைது
x

டீன்-ஏஜ் மகளை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.


அம்ரோஹா,


உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் வசித்து வருபவர் சுசில் வர்மா. இவரது மனைவி ஸ்மிரிதி ராணி வர்மா. இந்த தம்பதியின் மகள் குஷ்பூ வர்மா (வயது 16).

இந்த தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால், கணவரை பிரிந்த ராணிக்கு புதிதாக அனில் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது.

ஆனால், இதுபற்றி அறிந்த ராணியின் மகளுக்கு இவர்களது செயல் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை அம்ரோஹா மாவட்டத்தில் ஹசன்பூர் கொத்வாலி பகுதியில் மொகல்லா காலா சாஹீத் என்ற இடத்தில் வீட்டில் தற்கொலை செய்த நிலையில், குஷ்பூவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுசில் வர்மா தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலரான அனில் மீது புகார் அளித்து உள்ளார். முதலில், குஷ்பூ தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையின்போது ராணி கூறியுள்ளார்.

எனினும், இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்ததில், குஷ்பூ படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதன்பின் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மொராதாபாத் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story