மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் பலி; மனைவி-குழந்தை படுகாயம்


மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் பலி; மனைவி-குழந்தை படுகாயம்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:00 PM GMT (Updated: 2022-09-23T00:31:11+05:30)

உப்பள்ளியில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் மனைவி-குழந்தை படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா செரேவாடா கிராமத்தை சோ்ந்தவர் முகமது தஸ்பிக் நூல்வி (வயது 35). இவரது மனைவி ரியான் பானு. இந்த தம்பதிக்கு 2 வயது குழந்தை உள்ளது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை அவர்கள் குந்துகோலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர்.

அப்போது அவர்கள், உப்பள்ளி-லட்சுமேஷ்வர் சாலையில் வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் முகமது தஸ்பிக் நூல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மனைவியும், குழந்தையும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து குந்துகோல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story