வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட் அணிவது அவசியம்


வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட் அணிவது அவசியம்
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட் அணிவது அவசியம் என போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் அறிவுரை கூறினார்.

சிவமொக்கா :-

சிவமொக்கா(மாவட்டம்) டவுனில் நேற்று முன்தினம் மாலையில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோபி சதுக்கத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார், சிவமொக்கா துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமலும், தரமானதாக இல்லாமலும், பாதியளவு தலையை மட்டும் மறைத்திருக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்து எச்சரித்தனர்.

அப்போது அந்த வாகன ஓட்டிகளிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் கூறுகையில், 'ஹெல்மெட் அணிவது வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாப்பதற்காக தான். அதனால் தரமான ஹெல்மெட்களை அணிவது அவசியம்.

மேலும் பாதுகாப்பற்ற ஹெல்மெட்களை யாரும் அணியக்கூடாது' என்று கூறினார். மேலும் அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ஹெல்மெட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


1 More update

Next Story