பாரதிய ஜனதாவிற்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன்: வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு


பாரதிய ஜனதாவிற்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன்: வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு
x

என்னை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் வயநாடு தொகுதி மக்களுடன் இருப்பேன் என்று ராகுல் காந்தி பேசினார்.

வயநாடு,

அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த்து ராகுல் கந்தி மேல் முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இன்று முதல் முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு வந்தார். தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இணைந்து பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.

ராகுல் காந்திக்கு வயநாடு தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:- பாரதிய ஜனதாவிற்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன். எனக்கு எதிராக எது நடந்தாலும் நான் நானாக இருப்பேன். வயநாடு தொகுதி எம்.பியாக இருந்தாலும் இல்லாவிட்டலும் மக்களுக்காக போராடுவேன். நாட்டில் எத்தனையோ பேர் வீடு இல்லாமல் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். என்னை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் வயநாடு தொகுதி மக்களுடன் இருப்பேன்" என்றார்.

1 More update

Next Story