மத்திய பிரதேசத்தில் முன்னாள் பிரதமா் நேரு சிலை சேதம் - 6 போ் கைது


மத்திய பிரதேசத்தில் முன்னாள் பிரதமா் நேரு சிலை சேதம் - 6 போ் கைது
x

மத்திய பிரதேச மாநிலத்தில் முன்னாள் பிரதமா் நேருவின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் 6 போ் கைது செய்யப்பட்டனர்.

சாட்னா,

மத்தியப் பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தில் உள்ள கலெக்டா் அலுவலகத்திற்கு அருகில் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் சிலை உள்ளது. இந்த சிலையை 6 போ் கொண்ட மா்மகும்பல் ஒன்று சேதப்படுத்த முயன்றது.

அவர்கள் கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களால் நேருவின் சிலையை தாக்கி சேதப்படுத்த முன்றதாக கூறப்படுகிறது. கையில் காவிக்கொடி வைத்திருந்து அவா்கள் பாஜக கட்சிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினா். இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நேரு சிலையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசாா் கூறுகையில், கலெக்டா் அலுவலகத்திற்கு அருகில் உள்ள தாவரி சதுக்கத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிலையை சேதப்படுத்த முயன்ற நபா்கள் அடையாளம் காணப்பட்டு அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா் கூறினாா்.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தொிவித்துள்ளாா். இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் தொிவித்தாா்.


Next Story