ம.பி: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 18 மாத பெண் குழந்தை: மீட்கும் பணி தீவிரம்
மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 18 மாத பெண் குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போபால்,
மத்தியப் பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 மாத பெண் குழந்தை இன்று காலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளது. மாவட்ட தலைமையகத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள கஜாரி பார்கேடா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததாகத் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி லலித் சிங் டங்கூர் தெரிவித்தார்.
மாவட்டத்தின் பொறுப்பாளர் மருத்துவக் கல்வி த்துறை மந்திரி விஸ்வாஸ் சரங் மீட்பு நடவடிக்கையை உடனடியாக தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
Related Tags :
Next Story