மதுபாட்டில்களை சுத்தம் செய்யும் ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குடித்த பெண்


மதுபாட்டில்களை சுத்தம் செய்யும் ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குடித்த பெண்
x

கோப்புப்படம்

மதுபாட்டில்களை சுத்தம் செய்யும் ஆசிட்டை தண்ணீர் என்று நினைத்து குடித்த பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்கோன்,

மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் ரிங்கு தாக்கரே என்ற பெண் தூக்கி எறியப்பட்ட மதுபாட்டில்களை ஆசிட் கொண்டு சுத்தம் செய்து மீண்டும் மதுபான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் புதன்கிழமை, ரிங்கு தாக்கரே தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது, தனது அருகிலிருந்த சக ஊழியரிடம் தண்ணீர் கேட்டார். அந்த பெண் கொடுத்த பாட்டிலில் மதுபாட்டில்களை சுத்தம் செய்யும் ஆசிட் இருந்தது. இந்த நிலையில் ஆசிட்டை தண்ணீர் என்று நினைத்து ரிங்கு அருந்தியுள்ளார். தொண்டையில் எரிச்சலை உணர்ந்த அவருக்கு விரைவில் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தொழிற்சாலை மேற்பார்வையாளர் மற்றும் சக ஊழியர்கள் அவரை பர்வாஹா சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து கர்கோனுக்கு மாற்றுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தொழிற்சாலைக்கு சென்று விசாரிக்குமாறு உள்ளூர் போலீசாருக்கு கர்கோன் காவல் கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story