அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து நாய் போல மிக்கிரி செய்து கோரிக்கை வைத்த நபர்...! வீடியோ


அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து நாய் போல மிக்கிரி செய்து கோரிக்கை வைத்த நபர்...! வீடியோ
x
தினத்தந்தி 20 Nov 2022 11:30 AM IST (Updated: 20 Nov 2022 11:37 AM IST)
t-max-icont-min-icon

ரேசன் கார்டில் பெயருக்கு பின்னால் வரக்கூடிய பெயரை தத்தா என்பதற்கு பதிலாக குட்டா என எழுதியதால் அதிகாரியின் காரை மறித்து நாய் குரைப்பது போல கத்தி முறையிடும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொல்கத்தா,

அரசாங்க ஊழியர்களின் அலட்சியம் குறித்த செய்திகள் நாம் அவ்வப்போது கேட்டும் படித்தும் வருகிறோம். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகந்தி தத்தா. இவரின் பெயர் ரேஷன் கார்டில் தவறுதலாக பதிவாகியுள்ளது.இவர் தனது பெயரில் உள்ள தவறை மாற்ற விண்ணப்பித்த நிலையில், இரு முறையும் அது சரி செய்யப்படாமல் தவறாகவே இருந்துள்ளது. மூன்றாவது முறையும் விண்ணப்பித்த நிலையில், அவரது பெயர் ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்கு பதிலாக ஸ்ரீகாந்தி குட்டா என்று மாறி தவறாக வந்துள்ளது. இது அவரை கடும் விரக்தியில் ஆளாக்கியுள்ளது. காரணம் இந்தியில் குட்டா என்பதற்கு நாய் என்று பொருள்.

இதனால் கடுப்பான ஸ்ரீகாந்தி தத்தா, அப்பகுதிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் காரில் வந்த போது அவரது காரை மறித்து தனது கோரிக்கையை வித்தியாசமாக ஆத்திரத்துடன் முறையிட்டுள்ளார். தனது புகார் மனுவை அவரிடம் நீட்டி பல நொடிகள் நாய் போல குரைத்து காட்டி புகார் அளித்தார் ஸ்ரீகாந்தி தத்தா.

ஒரு நிமிடம் ஏதும் புரியாமல் திகைத்து போன அதிகாரி பின்னர் கோரிக்கையை வாங்கி படித்து சரி செய்வது தருவதாகக் கூறி அங்கிருந்து கிளம்பினார். ஸ்ரீகாந்தி தத்தா நாய் போல குரைத்து காட்டி மனு தரும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக ஸ்ரீகாந்தி தத்தா, "நான் இதுவரை மூன்று முறை தவறை திருத்த விண்ணப்பித்து வெறுத்துவிட்டேன். அதனால் தான் அதிகாரி முன் நாய் போல குரைத்து காட்டினேன். எங்களை போன்ற எளிய மக்கள் எத்தனை முறை தான் வேலையை விட்டுவிட்டு விண்ணப்பித்துக் கொண்டே இருக்க முடியும்" என்று கவலையுடன் தெரிவித்தார் ஸ்ரீகாந்தி தத்தா.

மேற்கு வங்கத்தில் தனது ரேசன் கார்டில் பெயருக்கு பின்னால் வரக்கூடிய பெயரை ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்கு பதிலாக குட்டா என எழுதியதால் அதிகாரியின் காரை மறித்து நாய் குரைப்பது போல கத்தி முறையிடும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குட்டா என்றால் இந்தி மொழியில் நாய் என்று அர்த்தமாம்.



Next Story