ரூ.800 கோடி சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக இருக்கும் தோனியின் மாமியார்
எம்எஸ் தோனியின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குத் தலைமை நிர்வாக அதிகாரியாக தோனியின் மாமியார் ஷீலா சிங் உள்ளார்.
மும்பை
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.
எம்எஸ் தோனியின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குத் தலைமை நிர்வாக அதிகாரியாக தோனியின் மாமியார் ஷீலா சிங் உள்ளார்.
ஷீலா சிங் தோனியின் மனிவி சாக்ஷி ஆகியோரின் தலைமையின் கீழ் இநிந்றுவனத்தின் வணிகம் சீராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தாய்-மகள் இருவரின் தலைமையின் கீழ், நிறுவனம் உருவாக்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டாக உயர்ந்துள்ளது.
ஷீலா சிங் ஒரு பெரிய வணிக அமைப்பிற்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறை, அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதிக்கு வீட்டில் வேலை செய்பவராக மட்டுமே இருந்தார். அவரது கணவர் விகே சிங், எம்எஸ் தோனியின் தந்தை பான் சிங்குடன் பணியாற்றியவர். இருவரும் தனியார் தேயிலை நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்தனர்.
தோனி எண்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக, தோனி எண்டர்டெயின்மென்ட் ரோர் ஆப் தி லயன் என்ற ஆவணப்படத்தையும் தயாரித்தது, இது மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளால் இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல்-க்கு திரும்பியதை ஆவணப்படுத்தியது.