முகேஷ் அம்பானிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்


முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்
x

முகேஷ் அம்பானிக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு 'இசட் பிளஸ்' ஆக மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை,

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவருமான முகேஷ் அம்பானி மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு மத்திய அரசு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கி வந்தது. இதேபோல அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானிக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு 'இசட் பிளஸ்' ஆக மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி 40-50 கமண்டோ படை வீரர்கள் ஆயுதங்களுடன் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.


Next Story