எதிர்க்கட்சிகளில் இரண்டு டஜன் பேர் பிரதமர் வேட்பாளர்கள் பட்டியலில் காத்திருக்கின்றனர் - பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி


எதிர்க்கட்சிகளில் இரண்டு டஜன் பேர் பிரதமர் வேட்பாளர்கள் பட்டியலில் காத்திருக்கின்றனர் - பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி
x

முன்னாள் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் பிரதமர் மோடியை புகழ்ந்தும் பேசினார்.

லக்னோ,

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் பிரதமர் மோடியை புகழ்ந்தும் பேசினார்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், "எதிர்க்கட்சிகளின் அணியில் நிதிஷ்குமார், மம்தாபானர்ஜி, அகிலேஷ் யாதவ் என பிரதமராகும் கனவுடன் இரண்டு டஜன் பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

மோடி போபியா(மோடி மீதான பயம்) என்ற அரசியல் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மறைந்து விடுவார்கள்.தீய சிந்தனை கொண்டவர்களால் பிரதமர் மோடியின் கடின உழைப்பையும், நேர்மையையும் வீழ்த்த முடியாது.

மோடிக்கு நாட்டின் பாதுகாப்பும் கண்ணியமும் 'தேசியக் கொள்கை' என்றால், ஏழைகள் ஒவ்வொருவரின் நலனும் ''தேசியம் தர்மம்' ஆகும்" என்று கூறினார்.

1 More update

Next Story