மும்பை - போலீஸ் பாஸ்போர்ட் சரிபார்ப்பு கணினி அமைப்பை ஹேக் செய்து 3 விண்ணப்பங்களை அழித்த ஹேக்கர்


மும்பை - போலீஸ் பாஸ்போர்ட் சரிபார்ப்பு கணினி அமைப்பை ஹேக் செய்து 3 விண்ணப்பங்களை அழித்த ஹேக்கர்
x

மூன்று பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு செயல்முறையை முடித்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை

மும்பை போலீஸின் பாஸ்போர்ட் கிளை அலுவலகத்தின் கணினி அமைப்பை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஹேக் செய்து, போலீஸ் அதிகாரியின் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை அணுகியுள்ளார் .

மேலும் பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறையை ஹேக் செய்து பாஸ்போர்ட் சரிபார்ப்பு நிலுவையில் உள்ள மூன்று விண்ணப்பங்களை அந்த நபர் அழித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஆன்லைன் பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறையை ஹேக் செய்து உள்நுழைந்து மூன்று பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு செயல்முறையை முடித்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

சரிபார்ப்பு ஆவணங்கள் அழிக்கப்பட்ட மூன்று நபர்களும் மும்பையில் உள்ள ஆன்டாப் ஹில், செம்பூர் மற்றும் திலக் நகர் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் கிளை அலுவலகத்தின் போலீஸ் அதிகாரியின் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை அணுகி பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story