மும்பை விமான நிலையம் மாலை 5 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு! விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றம்
மும்பை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மும்பை,
இந்தியாவில் புதுடெல்லிக்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்படும் விமான நிலையங்களில் மும்பை உள்ளது.
மும்பை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 800 விமானங்கள் இரண்டு ஓடுபாதைகள் வழியாக இயக்கப்படுகின்றன. மும்பை விமான நிலைய தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டு, அதானி குழுமத்தின் கீழ் இயங்குகிறது.
இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் நடைபெறும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 6 மணிநேரம் விமான நிலைய ஓடுபாதை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும் பருவமழைக்கு பிந்தைய தடுப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பல விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.