எருமைகள் மீது மோதியதில் சேதமடைந்த வந்தே பாரத் ரெயில் சரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கம்


எருமைகள் மீது மோதியதில் சேதமடைந்த வந்தே பாரத் ரெயில் சரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கம்
x

Image Courtesy: ANI/ Twitter 

தினத்தந்தி 7 Oct 2022 12:35 PM GMT (Updated: 7 Oct 2022 1:07 PM GMT)

சேதம் சரிசெய்யப்பட்ட பின் இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்பட்டது.

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நேற்று காலை அந்த ரெயில், வத்வா ரெயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரெயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது, காட்டெருமை கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது.

இதில், விரைவாக வந்த ரெயில் அவற்றின் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ரெயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது.

இந்த நிலையில் பலத்த சேதமடைந்த முன்பகுதிக்கு பதிலாக மும்பையிலிருந்து வேறு ஒருபகுதி வரவழைக்கப்பட்டு இன்று மாற்றப்பட்டுள்ளது. சேதம் சரிசெய்யப்பட்ட பின் பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இன்று மீண்டும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல் இயக்கப்பட்டது என மேற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எருமைகள் மீது மோதி வந்தே பாரத் ரெயில் சேதம் அடைந்த சம்பவத்தில் எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story