மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 4.30 மணியளவில் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் லேண்ட்லைன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்ம நபர் ஒருவர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார். பின்னர் உடனே அழைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவலளித்தனர். பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 505 (1) (பி) மற்றும் 506 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு விடுத்தவரை கண்டுபிடித்துள்ளதாகவும் விரைவில் குற்றவாளியை கைது செய்வதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story