மாநிலங்களவை எம்.பி.யாக இன்று பதவியேற்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா


மாநிலங்களவை எம்.பி.யாக இன்று பதவியேற்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா
x

மாநிலங்களவை எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா இன்று பதவியேற்கிறார்.

புதுடெல்லி,

விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா,ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியற்றுக்கொண்டனர் .இளையராஜா பதவி ஏற்கவில்லை.

இந்த நிலையில் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.ஆக இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்க உள்ளார். இதற்காக அவர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story