இந்து கோவிலுக்கு தலா 600 கிலோ எடை கொண்ட 6 சிலைகளை கொண்டு செல்ல உதவிய முஸ்லிம்கள்


இந்து கோவிலுக்கு தலா 600 கிலோ எடை கொண்ட 6 சிலைகளை கொண்டு செல்ல உதவிய முஸ்லிம்கள்
x

காஷ்மீரில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சிவன் கோவிலுக்கு 6 சிலைகளை இந்துக்களுடன் இணைந்து முஸ்லிம்கள் கொண்டு சென்றனர்.



ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரில் தோடா பகுதியில் குர்சாரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மலை உச்சியில் சமீபத்தில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அருகேயுள்ள சாலையில் இருந்து 3 கி.மீ. உயரத்திற்கு மலையில் இருந்த கோவிலுக்கு சிலைகளை கொண்டு செல்ல வேண்டி இருந்தது.

இதற்காக தலா 600 முதல் 700 கிலோ எடை கொண்ட 6 சிலைகள் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டன. ஆனால், முறையான சாலை வசதிகள் இல்லை. இதனால், பஞ்சாயத்து தலைவர் சஜித் மீர் என்பவரிடம் இந்துக்கள் சென்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து சாலை கட்டமைப்புக்கு ரூ.4.6 லட்சம் தொகையை அவர் ஒதுக்கியதுடன், இந்து சமூகத்தினருக்கு சிலையை கோவிலுக்கு கொண்டு செல்ல உதவும்படி உள்ளூர்வாசிகளை மீர் கேட்டு கொண்டார்.

இதனை தொடர்ந்து, இந்துக்களுடன் சேர்ந்து முஸ்லிம்களும் கயிறுகள் மற்றும் தேவையான சாதனங்களை கொண்டு சிலையை மலையுச்சியில் உள்ள கோவிலுக்கு 4 நாட்களாக முயன்று கொண்டு சென்றுள்ளனர். அவர்களுக்கு நகர நிர்வாகம், சாலை கட்டுமான தொழிலில் ஈடுபட்டவர்கள் மற்றும் உள்ளூர் ராணுவ பிரிவும் அனைத்து ஆதரவையும் வழங்கியது.

கோவில் நிர்வாக குழுவும் முஸ்லிம் மக்களின் உதவியை பாராட்டி உள்ளது. அதன் தலைவர் ரவீந்தர் பர்தீப், எங்களுக்கு வலிமை தந்த அவர்களின் அன்பும், பாசமும் சிறந்தது என கூறியுள்ளார். வருகிற 9ந்தேதி கோவிலில் மத திருவிழா நடைபெற உள்ளது.


Next Story