மாயமான ராணுவ அதிகாரி பெலகாவியில் சுற்றித்திரிந்த அவலம்


மாயமான ராணுவ அதிகாரி பெலகாவியில் சுற்றித்திரிந்த அவலம்
x

பெலகாவி டவுனில் மராத்தா லைட் இன்பான்டரி ரெஜிமண்டல் எனும் ராணுவ பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

பெலகாவி,

பெலகாவி டவுனில் மராத்தா லைட் இன்பான்டரி ரெஜிமண்டல் எனும் ராணுவ பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஜி.எல்.வி. கமான்டோ விங் அதிகாரியாக சுபேதார் மேஜர் சுர்ஜித் சிங்(வயது 45) என்பவர் பணியாற்றி வந்தார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் இங்கு 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 22-ந்தேதி அவர் திடீரென்று மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் பெலகாவி கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கண்டுபிடிக்க துணை போலீஸ் கமிஷனர் சினேகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பெலகாவி ரெயில் நிலையத்தில் இருந்த சுர்ஜித் சிங்கை ரெயில்வே போலீசார் மீட்டு, ராணுவ பயிற்சி முகாம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததும், பெலகாவியில் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அவர் மராட்டிய மாநிலம் கோலாப்புரா செல்ல ரெயில் நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது.


Next Story