காஷ்மீரில் பறந்த மர்ம ஆளில்லா விமானம்; பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை


காஷ்மீரில் பறந்த மர்ம ஆளில்லா விமானம்; பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை
x

காஷ்மீரில் மர்ம ஆளில்லா விமானம் பறந்த நிலையில் பாதுகாப்பு படையினர் பதிலுக்கு மற்றொரு ஆளில்லா விமானம் ஒன்றை பறக்க விட்டு தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.



ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் மங்கு சக் என்ற கிராமத்தில் நேற்றிரவு அடையாளம் தெரியாத ஆளில்லா விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. இதனை கவனித்த கிராமவாசிகள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அருகேயுள்ள காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும், இரவு நேரத்தில் எதுவும் தெரிய வரவில்லை.

இந்நிலையில், கிராமவாசிகளின் தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் இன்று காலை ஆளில்லா விமானம் ஒன்றை அந்த பகுதியில் பறக்க விட்டனர். வேறு ஏதேனும் ஆளில்லா விமானம் அந்த பகுதியில் பறக்கிறதா? அல்லது அதனால், தீங்கு எதுவும் விளைவிக்கப்பட்டு உள்ளதா? என்ற அடிப்படையில் தேடுதல் பணியை படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

1 More update

Next Story