கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு- பிரியங்க் கார்கே

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் பெங்களூருவில் உள்ள போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வீட்டை ஏ.பி.வி.பி. அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் மீது போலீசார் தடியடியும் நடத்தினார்கள். கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. போலீஸ் மந்திரி வீட்டை முற்றுகையிட்டு இருப்பதே, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கான முக்கிய ஆதாரம் ஆகும். இதற்கு பொறுப்பு ஏற்று மந்திரி பதவியை அரக ஞானேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story






