சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு 'நாசா' வாழ்த்து: ஐரோப்பிய நிறுவனமும் பாராட்டு


சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு நாசா வாழ்த்து: ஐரோப்பிய நிறுவனமும் பாராட்டு
x
தினத்தந்தி 15 July 2023 8:10 PM GMT (Updated: 15 July 2023 10:11 PM GMT)

இந்தியாவின் சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு 'நாசா' மற்றும் ஐரோப்பிய நிறுவனம் ஆகியவை பாராட்டு தெரிவித்துள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தை பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் பாராட்டி உள்ளன. அந்தவகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' வாழ்த்து தெரிவித்து உள்ளது.

அந்த நிறுவனத்தின் நிர்வாகியும், செனட் சபை உறுப்பினருமான பில் நெல்சன் கூறுகையில், 'சந்திரயான்-3 ஏவிய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நீங்கள் நிலவுக்கு பாதுகாப்பாக பயணம் செய்ய வாழ்த்துகிறேன். 'நாசா'வின் லேசர் ரெட்ரோரெப்ளெக்டர் வரிசை உள்பட, இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் அறிவியல் முடிவுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம். நிலவு ஆய்வு திட்டத்தில் இந்தியா தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகிறது!' என்றார்.

இதைப்போல ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தில், 'மிகப்பெரிய ஏவுதல் பணிகளுக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்' என குறிப்பிட்டு இருந்தது.


Next Story