மாநில உணவுத்துறை மந்திரிகள் மாநாடு: டெல்லியில் இன்று நடக்கிறது


மாநில உணவுத்துறை மந்திரிகள் மாநாடு: டெல்லியில் இன்று நடக்கிறது
x

Image Courtacy: PTI

டெல்லியில் மாநில உணவுத்துறை மந்திரிகள் மாநாடு இன்று நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் சார்பில் தேசிய உணவுத்துறை மந்திரிகள் மாநாடு டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் அனைத்து மாநிலங்களின் உணவுத்துறை மந்திரிகள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில், 2023-2024-ம் ஆண்டுக்கான கரீப் சந்தைப்பருவத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கொள்முதலுக்கான செயல்திட்டத்தை உருவாக்குவது பற்றியும், 'பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் பல விஷயங்களும் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

மாநாட்டுக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது வினியோகம் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் தலைமை தாங்குகிறார். ராஜாங்க மந்திரிகள் அஸ்வினிகுமார் சவுபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில மந்திரிகளுடன் துறைச் செயலாளர்களும் கலந்துகொள்கிறார்கள்.


Next Story