நான்முகச் சிங்க உருவ அமைப்பில் மாற்றம்: மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்
புதிதாக நிறுவப்பட்டுள்ள தேசிய சின்னம் முன்பு போல் இல்லை எனவும் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சாடியுள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவின் தேசிய சின்னமான நான்முகச் சிங்கம், புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை தாங்கி பிடிக்க 6,500 கிலோ எடையில் 4 புறமும் எஃகு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த நிலையில், புதிய சின்னம் முன்பு போல் இல்லை எனவும் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சாடியுள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், "தேசிய சின்னத்தில் உள்ள சிங்கங்கள் அதன் மென்மையான வெளிப்பாட்டிற்காக பெயர் பெற்றவை. புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலையில் உள்ள சிங்கங்கள் மனிதனை உண்ணும் தன்மையில் இருக்கின்றன" என சாடியுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.